'தலைவா.. தலைவா..' வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய ரஜினி.. வீடியோ வைரல் !!
'தலைவா.. தலைவா..' வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய ரஜினி.. வீடியோ வைரல் !!

தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் அதிகளவில் குவிந்து வாழ்த்துதெரிவிப்பர். ரஜினியும் வெளியேவந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். முன்பு அவர் அரசியலுக்கு வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கும்.
எனினும் தற்போது அரசியல் இல்லையென உறுதியான பின்னரும் ரசிகர்கள் தங்கள் வழக்கத்தை மாற்றாமல் உற்சாகத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு இன்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ‘தலைவா... தலைவா...’ கோஷம் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
— Superstar Fans Club (@Rajini_RFC) April 14, 2022
தலைவா @rajinikanth 🤘#Thalaivar169 | #Superstar | #Rajinikanth pic.twitter.com/lF5ZFdyv1E
newstm.in

