Theme Check

இந்தியாவிலிருந்து வெளியேறும் முக்கிய நிறுவனம்!!

இந்தியாவிலிருந்து வெளியேறும் முக்கிய நிறுவனம்!!

இந்தியாவிலிருந்து வெளியேறும் முக்கிய நிறுவனம்!!
X

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Express VPN சேவை பீட்டர் புச்சர்டு மற்றும் டான் போமேரான்ட்ஸ் ஆகிய இரண்டு பள்ளி மாணவர்களால் தொடங்கப்பட்டது. இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த VPN சேவை உலகம் முழுவதும் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் Express VPN திடீரென இந்தியாவிலிருந்து வெளியேறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் பயனாளிகள் பாதுகாப்பாக தங்களது கணினியில் பணிபுரிய வழிவகை செய்யும் ஒரு அமைப்புதான் VPN.

அரசு முதல் தனி நபர்கள் வரை தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பலருக்கும் பாதுகாப்பு அம்சங்களை VPN செய்து வருகிறது. நேரடியாக அக்சஸ் செய்ய முடியாத வலைதளங்கள், வலைத்தள சேவைகள் மற்றும் டிராக் செய்ய முடியாதவற்றை VPN சேவைகள் செய்து வருவதால் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

expressvpn

அதே நேரத்தில் ஆன்லைன் மோசடி, ஹேக் செய்வது, பிரைவசி தன்மை இல்லாமல் இருப்பது, அண்டர்கிரவுண்ட் சேனல்கள் ஆகியவற்றுக்கும் VPN பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருவதை அடுத்து இந்திய அரசாங்கம் சில புதிய விதிமுறைகளை அறிவித்தது.

இதனை அடுத்து 13 வருடங்களாக இந்தியாவில் VPN சேவைகளை செய்து வந்த Express VPN இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதனால் அதன் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it