மக்களே ஷாக் நியூஸ்!! டிவி விலை உயரப்போகுது
மக்களே ஷாக் நியூஸ்!! டிவி விலை உயரப்போகுது

தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து வீடுகளிலும் இன்று எல். இ .டி/ஓ.எல்.இ. டி டிவிகளே பெரிதும் காணப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் முதல் இந்த டிவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எல்.இ.டி / ஓ.எல்.இ.டி டிவி உதிரிபாகங்களில் முக்கியமான ஒன்றான ஓபன் செல் பேனல்களின் விலை கடந்த ஒரே மாதத்தில் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் டிவி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் மீது 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விலை உயர்வை கொண்டுவர உள்ளது.

ஏற்கனவே LG நிறுவனம் டிவி விலையை உயர்த்தி உள்ள நிலையில் Panasonic, Haier, Thomson போன்ற முன்னணி நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் விலை உயர்வை கொண்டு வருகிறது.இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள Panasonic India நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் மணிஷ் ஷர்மா, பேனல்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் டிவிகளில் விலையையும் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் Haier Appliances India நிறுவனத்தின் தலைவர் எரிக் பிரகன்ஸா-வும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பேனல்களின் விலை ஏற்றம் 350 சதவீதம் அளவிற்கு உயர்ந்து இருப்பதாக Thomson மற்றும் Kodak நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் Xiaomi, Mi, Realms, One plus போன்ற புதிய நிறுவனங்கள் தங்களின் டிவி விலையை 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் மற்ற நிறுவனங்களும் அறிவித்துள்ள இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

