கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி.. மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி நிலவரம் என்ன?
கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி.. மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி நிலவரம் என்ன?

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில், கேரளத்தில் இடது முன்னணி 72 முதல் 80 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி -சிஎன்எக்ஸ் நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 64 இடங்களையும் பா.ஜ.க. அணி 1 முதல் 5 இடங்களையும் கைப்பற்றும் என்றும் கணித்துள்ளது.

அதேபோல், புதுச்சேரியில் பாஜக அணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பாஜக கூட்டணி 16 முதல் 20 இடங்களையும் காங்கிரஸ் அணி 11 முதல் 13 இடங்களையும் கைப்பற்றக் கூடும் என்று கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முடிவுகள் இழுபறியாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
திரிணாமுல் கூட்டணி 128 முதல் 138 இடங்களையும் பாஜக அணி 138 முதல் 148 இடங்களையும் காங்கிரஸ் - இடதுசாரி அணி 11 முதல் 21 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ஆனால், அசாமில் பாஜக ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பாஜக கூட்டணி 74 முதல் 84 தொகுதிகளையும் காங்கிரஸ் அணி 40 முதல் 50 தொகுதிகளையும் பிற கட்சிகள் 13 தொகுதிகளையும் கைப்பற்றலாம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
newstm.in

