விக் பறக்காமல் ஆக்ஷன் காட்சியில் நடித்து துவம்சம் செய்த லெஜண்ட் சரவணன்..!
விக் பறக்காமல் ஆக்ஷன் காட்சியில் நடித்து துவம்சம் செய்த லெஜண்ட் சரவணன்..!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடித்து வரும் படத்திற்கான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னையில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபரான லெஜண்ட் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல விளம்பர பட இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி என்கிற இரட்டை இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களே மிக பிரமாண்டமாக இருக்கும். அதன் உரிமையாளர் நடிக்கும் படம் என்றால் கேட்க வேண்டுமா என்ன..? மிகவும் அதிக பொருட்செலவில், பெரிய பட்ஜெட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் தயாராகி வருகிறது.

முதல் படத்திலேயே கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார் லெஜண்ட் சரவணன். விளம்பரங்கள் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் தமிழகளவில் பேசுபொருளானது. அந்த நம்பிக்கையில் அவர் சினிமாவில் கால்பதிக்க விரும்புவதாக கூறுகிறார்கள் படக்குழுவினர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்திற்கான அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளன. அது தற்போது வைரலாகி வருகின்றனர். முற்றிலும் மாறுபட்ட கெட்-அப்பில் மாஸ் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி தோன்றும் இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.



