இன்றும் சட்டப் பேரவை புறக்கணிப்பு! ஓ.பி.எஸ். அறிவிப்பு!
இன்றும் சட்டப் பேரவை புறக்கணிப்பு! ஓ.பி.எஸ். அறிவிப்பு!

இன்றும் தமிழக அரசைக் கண்டித்து சட்டப்பேரவையில் அதிமுக பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் நேற்று மறுவிசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று எதிரொலித்துள்ளது. கொடநாடு வழக்கில் அதிமுவினரை சேர்க்க சதித்திட்டம் நடப்பதாக குற்றம் சாட்டிய அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து இன்றும் (19ம் தேதி) அதிமுகவினர் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Tags:
Next Story