Theme Check

ஆணாக நடித்து சிறுமி கடத்தல்: லெஸ்பியன் இளம் பெண் கைது !!

ஆணாக நடித்து சிறுமி கடத்தல்: லெஸ்பியன் இளம் பெண் கைது !!

ஆணாக நடித்து சிறுமி கடத்தல்: லெஸ்பியன் இளம் பெண் கைது !!
X

ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவந்த சிறுமி, கடந்த வாரம் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து உறவினர்கள் ஆலப்புழா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

மாணவியின் செல்போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி மெசஞ்சர் என்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும் சந்து என்ற இளைஞருடன் அடிக்கடி சாட்டிங் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் அவர்தான் சிறுமியை கடத்தி சென்றதும், அவர் ஆண் அல்ல இளம்பெண் என்ற அதிர்ச்சி தகவலையும் கண்டுபிடித்தனர்.

திருவனந்தபுரம் அருவிக்குழி பகுதியை சேர்ந்த சந்தியா (27). திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மாவேலிக்கரை பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியுடன் சந்தியா இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் சந்தியாவை கைது செய்தனர்.
Woman disguised as man abducts Plus One student, gets arrested  Read full news at https://keralakaumudi.com/en/news/news.php?id=732299&u=woman-disguised-as-man-abducts-plus-one-student-gets-arrested
தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போதை பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடைய சந்தியா மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதோடுமட்டுமல்லாம ஏற்கனவே சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொண்ட புகாரில் அவர் மீது 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது ஆண் வேடமிட்டு சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இவர் லெஸ்பியன் உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண் போல் சமூக வலைதளங்களில் மாணவிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பின்னர் நெருங்கி உறவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் போலீசார் சந்தியாவை மாவேலிக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it