தமிழகத்தில் 20,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு !!
தமிழகத்தில் 20,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு !!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1.30லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 19,280 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 33,45,220 என்றாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25,056 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து, தற்போது கொரோனா சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,98,130 என்றாகியுள்ளது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் ஐசியு பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 1080 லிருந்து 1030 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 2897, கோயம்புத்தூர் – 2456, செங்கல்பட்டு – 1430, திருப்பூர் – 1425, சேலம் – 1101, ஈரோடு – 1070 பேர் என ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
newstm.in

