குழந்தைகளை தனி அறையில் தூங்க விடுங்கள்!

குழந்தைகளை தனி அறையில் தூங்க விடுங்கள்!

குழந்தைகளை தனி அறையில் தூங்க விடுங்கள்!
X

குழந்தை பிறந்ததிலிருந்தே தாயின் அருகாமையில் படுத்தே வளரத் தொடங்குகிறது. இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் தனியாக படுக்க வைக்கப்படும் முதல் குழந்தைகள் பயத்திற்கு ஆளாகின்றன. இந்த பயத்தையே தமது தம்பி, தங்கைகளிடம் கோபமாக வெளிப்படுத்துகின்றன.இரு குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் ஒரு குழந்தையை அம்மாவிடத்திலும், ஒரு குழந்தையை அப்பாவிடத்திலும் படுக்க வைத்து பழக்கப்படுத்த வேண்டும்.

மறுநாள் குழந்தைகள் இடம் மாற்றி படுக்க வைக்கப்பட தாய், தந்தை இருவரிடமுமே பாசத்துடன் குழந்தைகள் வளர்வார்கள். இவை அனைத்தும் குழந்தைகளுக்கு 8 வயது வரையே. அதன் பிறகு தனிமை, இருட்டு ஆகியவை பழக்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நகரங்களில் இட நெருக்கடி காரணமாகவும், ஒரு குழந்தை மட்டுமே வைத்திருக்கும் பெற்றோரின் அதீத அன்பின் காரணமாகவும் குழந்தைகளை தனியாகத் தூங்க அனுமதிப்பதில்லை.

ஆரம்பத்தில் பயத்துடன் தூங்க ஆரம்பிக்கும் குழந்தைகள் நாளடைவில் அவர்களுக்கான பிரத்யேகமான நேரங்களாக இரவு நேரத்தை பழக்கப்படுத்திக் கொண்டு விடும்.10 வயதிற்குப் பிறகும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை பெற்றோர்களே நல்ல விதமாய் எடுத்துச் சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

இப்படி தனியாக தூங்க வைக்கப்படும் குழந்தைகளே மன ரீதியாக முழுவளர்ச்சி அடைவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களால் உருவாக்கப்படும் அந்த தனிமையே அவர்களுக்கு மன வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் அளிக்கும் என்கின்றனர் குழந்தை மருத்துவ நிபுணர்கள்.

குழந்தைகளை தனியறையில் தூங்கப் பழக்கப்படுத்துவோம். அவர்களுக்கு உடல் வளர்ச்சியுடன் மன வளர்ச்சியையும் அளிப்போம். அவர்களின் ஆரோக்கியத்துடன் எதிர்கால வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள துணை நிற்போம்.

Tags:
Next Story
Share it