Theme Check

தேர்தல் வந்தா கொள்கையை மறப்போம்... ராமர் கோவிலுக்கு 35 திமுக எம்.எல்.ஏக்கள் நிதி கொடுத்ததாக தகவல்!

தேர்தல் வந்தா கொள்கையை மறப்போம்... ராமர் கோவிலுக்கு 35 திமுக எம்.எல்.ஏக்கள் நிதி கொடுத்ததாக தகவல்!

தேர்தல் வந்தா கொள்கையை மறப்போம்... ராமர் கோவிலுக்கு 35 திமுக எம்.எல்.ஏக்கள் நிதி கொடுத்ததாக தகவல்!
X

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல்வேறு தரப்பினரும் நிதி உதவி செய்து வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் 35 பேர் நிதி உதவி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பல்வேறு இந்து அமைப்புகள் நன்கொடை வசூலித்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 67 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் நிதி கொடுத்திருப்பதாக இணையத்தில் பரவும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் திமுக கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டுள்ள இயக்கம். ஆனால் ராமர் கோவிலுக்கு திமுக எம்எல்ஏக்கள் நன்கொடை அளித்திருப்பதாக வெளியாகியுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி இருந்த வரை பலரும் கடவுள் வழிபாட்டை மறைத்து வந்தனர் என்றும், தற்போது வெளிப்படையாக காட்டத் தொடங்கிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் வேல் வாங்கிக் கொண்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.

அந்த வகையில் தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிலுக்கு நன்கொடை அளித்திருப்பதாக செய்தி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it