Theme Check

இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா! - முதல் ஆளாக சிக்கியது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தான் !!

இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா! - முதல் ஆளாக சிக்கியது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தான் !!

இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா! - முதல் ஆளாக சிக்கியது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தான் !!
X

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செல்வத்தை மற்றொரு வேட்பாளர் கடத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்ற நிலையில் இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக உள்ளது. எனினும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு தான் தலைவர்களை தேர்வு செய்ய, வார்டு உறுப்பினர்கள் கடத்தப்படுவர். ஆனால் புதுக்கோட்டையில் வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vote

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் காவுதீன் என்பவர் ஆன்லைன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், உள்ளாட்சித் தேர்தலில் சுதந்திரமாக போட்டியிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் செல்வத்துக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், போட்டியிலிருந்து விலகும்படி செல்வத்தை கடந்த 3 நாட்களாக லட்சுமணன் வலியுறுத்தி வந்ததாகவும் அவர் மறுத்துவிட்டதால் கடத்தி சென்றுவிட்டதாகவும் செல்வத்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். கடத்தியதாக கூறப்படும் லட்சுமணனும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் தான் என கூறப்படுகிறது. இலுப்பூர் பேரூராட்சியின் 3ஆவது வார்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.

newstm.in


Next Story
Share it