Theme Check

காபூல் தாக்குதலுக்கு வேட்டையாடுவோம்.. அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு !

காபூல் தாக்குதலுக்கு வேட்டையாடுவோம்.. அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு !

காபூல் தாக்குதலுக்கு வேட்டையாடுவோம்.. அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு !
X

காபூல் தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் விமான நிலையம் அருகே நேற்று இரு தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்ல அமெரிக்க வீரா்கள் 13 போ் உள்பட 90 பேர் கொல்லப்பட்டனர். 140-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதக் குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

kabul attack

இந்நிலையில், காபூல் தாக்குதலை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பயங்கவராதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை முழுவதுமாக மீட்போம். எங்களுடைய ஆப்கானிஸ்தான் கூட்டாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றுவோம். எங்களுடைய மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும்.

joe bidens

காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தை நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்குப் பதிலாக எங்கள் படைகளுடன் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவோம். என அதிரடியாக எச்சரித்தார். பயங்கரவாதிகளால் அமெரிக்காவை ஒருபோதும் தடுக்க முடியாது.

தலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் என பைடன் தெரிவித்தார்.

joe bidens

காபூல் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில் ஆகஸ்ட் 30 மாலை வரை வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து பொது கட்டிடங்கள், மைதானங்களில் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.


newstm.in

Tags:
Next Story
Share it