Theme Check

இதற்காக யாரையும் கொலை செய்வோம்.. பாஜக தலைவர்கள் முன்பு சாமியார்கள் எடுத்த உறுதிமொழி !

இதற்காக யாரையும் கொலை செய்வோம்.. பாஜக தலைவர்கள் முன்பு சாமியார்கள் எடுத்த உறுதிமொழி !

இதற்காக யாரையும் கொலை செய்வோம்.. பாஜக தலைவர்கள் முன்பு சாமியார்கள் எடுத்த உறுதிமொழி !
X

இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவதற்கு யாரையும் கொலை செய்வோம் பா.ஜ.க தலைவர்களின் முன்னிலையிலேயே சாமியார்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட மாநிலம் ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு மூன்றுநாட்கள் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த 17ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் உத்தரப் பிரதேச அமைச்சர் ராஜேஷ், பா.ஜ.க தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் சில தலைவர்கள் உரையாற்றவும் செய்தனர்.

samiyar

இந்த நிலையில், இந்த மாட்டின் இறுதிநாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இறுதிநாளில், இந்து அமைப்பினர் உரையாற்றியுள்ளனர். அந்த வகையில் பேசிய ஒருவர், இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காகக் கொலையும் செய்வோம் என கூறினார். மேலும் இதனை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவர்களின் இந்த உறுதிமொழி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் வெறுப்பைத் தூண்டும் வகையில் மாநாடு நடத்திய தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it