Theme Check

இணைந்து பணியாற்றுவோம்.. பஞ்சாப் முதல்வருக்கு மோடி வாழ்த்து..!

இணைந்து பணியாற்றுவோம்.. பஞ்சாப் முதல்வருக்கு மோடி வாழ்த்து..!

இணைந்து பணியாற்றுவோம்.. பஞ்சாப் முதல்வருக்கு மோடி வாழ்த்து..!
X

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இதையடுத்து, பஞ்சாப்பின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் பதவியேற்று கொண்டார்.

அவருக்கு, பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
PM Modi Congratulates New Punjab CM Bhagwant Mann, Says 'will Work Together  For Growth'
இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மாநில மக்களின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.


Tags:
Next Story
Share it