வாழ்க்கையை சீரழிக்கும் சமூக வலைத்தளம்! பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய தாய்!
வாழ்க்கையை சீரழிக்கும் சமூக வலைத்தளம்! பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய தாய்!

கொரோனா பாதிப்பு தற்போது நாடு முழுவதும் குறைந்து வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் குப்பையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாந்தனூர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல் மீட்கபட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் அந்த குழந்தையை பிறந்த சில மணி நேரத்திலேயே யாரோ வீசிசென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆகவே குழந்தையை கொன்று குப்பையில் வீசிச் சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

தொடர் விசாரணையில் சாந்தனூர் அருகே உள்ள வேலுவிளை பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி ரேஷ்மா (21) என்பவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை வீட்டில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசியதை ரேஷ்மா ஒப்புக்கொண்டார். குழந்தையை கொன்று வீசியதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிரச்செய்து. அதாவது, எனக்கும் இளைஞர் ஒருவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் சேர்ந்து வாழ சென்று விட நான் தீர்மானித்தேன். ஆனால் அதற்கு எனது குழந்தை இடையூறாக இருக்கும் என்று கருதினேன். இதனால் எனக்கு குழந்தை பிறந்ததும் கொன்று குப்பையில் வீசிவிட்டேன் என்றார்.

இதையடுத்து ரேஷ்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை கொலை சம்பவம் நடந்து 6 மாதத்திற்கு பிறகு குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

