Theme Check

கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோவுக்கு அனுமதி!!

கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோவுக்கு அனுமதி!!

கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோவுக்கு அனுமதி!!
X

சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை 2ஆவது வழித்தடத்தின் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மொத்தம் சுமார் 26.8 கிலோமீட்டர் நீளம் இந்த புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 10.3 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில் 9 நிலையங்கள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட உள்ளது.

Metro

இந்த மெட்ரோ வழித்தட கட்டுமானப் பணிகளின்போது வெளியேற்றப்படும் கழிவுகளை பத்திரமாக அகற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் 133 மரங்கள் அகற்றப்பட உள்ள நிலையில் அதனை ஈடுகட்டுவதற்காக 12 மடங்கு அதிகமாக அதாவது 1,596 மரங்கள் நடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metro

ரூ.12,669 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் ரூ. 22.33 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக மட்டுமே செலவிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it