Theme Check

மின்னல் வேகம்.. செக் போஸ்ட் தடுப்பில் !! பதறவைக்கும் சிசிடிவி காட்சி !

மின்னல் வேகம்.. செக் போஸ்ட் தடுப்பில் !! பதறவைக்கும் சிசிடிவி காட்சி !

மின்னல் வேகம்.. செக் போஸ்ட் தடுப்பில் !! பதறவைக்கும் சிசிடிவி காட்சி !
X

அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மச்செரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் பகுதியில் வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். தற்போது ஊரங்கு என்பதால் அப்பகுதி அடைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் இளைஞர்கள் இருவர் அதனை மீறி சென்று விபத்தில் சிக்கியுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த வனத்துறை அதிகாரி சோதனைச் சாவடியில் இருந்த இரும்பு தடுப்பு கேட்டை கீழே இறக்கியுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த பைக்கை வனத்துறை அதிகாரி நிறுத்தும்படி கை அசைத்தார். எனினும் அந்த பைக்கில் வந்த இரு இளைஞர்களும் வேகத்தை சிறிதும் குறைக்கவில்லை.

அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த இளைஞர், தலையை கீழே குனிந்தபடி சோதனை சாவடியை தடுப்பை கடந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்பு தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டிய இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

பலியான இளைஞர் சுதேனி வெங்கடேஷ் கவுட் என்று அடையாளம் காணப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர் லக்செட்டிபேட்டை மண்டலத்தில் உள்ள கோத்தக்குமுகுதேம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி சந்திரசேகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கச்செய்துள்ளது.


newstm.in


Tags:
Next Story
Share it