நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்யலாம்- அரசு அனுமதி !
நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்யலாம்- அரசு அனுமதி !

புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. பிற மதுக்கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் தற்போது வரை 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கூறி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதே இடத்தில் வைத்து அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தாண்டிற்கு புதுச்சேரிக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் 31 ஆம் தேதி முதல் 1ஆம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ். வி .பட்டேல் சாலை, செஞ்சி சாலை, நேரு வீதி, புஸ்ஸி வீதி, மற்றும் சுப்பையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
newstm.in

