Theme Check

மதுப் பிரியர்களே.. இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா..?

மதுப் பிரியர்களே.. இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா..?

மதுப் பிரியர்களே.. இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா..?
X

தமிழகத்தில் ஜனவரி 15, 18, 26-ம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஜனவரி 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 18-ம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால் இந்த மூன்று நாட்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் விற்பனையில்லா தினங்களாக இந்த நாட்கள் அனுசரிக்கப்படுகிறது என்பதால் இந்த மூன்று நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அன்றைய தினமும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மாதத்தில் மொத்தம் ஆறு நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகள் அடைக்கப்படவுள்ளது.

Next Story
Share it