மதுப்பிரியர்களே.. நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!
மதுப்பிரியர்களே.. நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!

தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முந்தினம் (19ம் தேதி) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் நாளை (22-ம் தேதி) எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அதன் 5 கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்: அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யவும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

