Theme Check

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு..!!

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு..!!

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு..!!
X

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொறுத்தவரை 450-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன. இந்நிலையில், தற்போது மூன்று வருடங்களுக்கு பிறகு மதுபான விலையை உயர்த்தி இருப்பது மதுபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2017 ஆண்டிற்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை, கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது.அதைத் தொடர்ந்து 2019 ஜூலையில் மீண்டும் விலையை அரசு உயர்த்தியது.பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கொரோனா விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை இருந்தன. இந்நிலையில் கரோனா வரி கடந்த மாதம் நீக்கப்பட்டு விலை குறைந்தது.

இந்நிலையில் கலால்துறை புதிய உத்தரவை நேற்று இரவு பிறப்பித்தது. அதில், "புதுச்சேரியில் விற்கப்படும் இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்வு ஜூலை 15 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுபானம் இனி 120 ரூபாய்க்கு விற்கப்படும்.ஒரேடியாக 20 சதவீதம் உயர்த்தப்பட்டது மதுபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Tags:
Next Story
Share it