Theme Check

கோக் குளிர்பானத்தில் மிதந்த பல்லி.. பிரபல கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

கோக் குளிர்பானத்தில் மிதந்த பல்லி.. பிரபல கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

கோக் குளிர்பானத்தில் மிதந்த பல்லி.. பிரபல கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!
X

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் கடைக்கு பார்கவ் ஜோஷி என்பவர் தனது நண்பர்களுடன் சென்றார். அவர் பர்கர் மற்றும் கோக் குளிர்பானம் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன் பின்னர் கோக் குடித்து கொண்டிருந்தபோது, அந்த பானத்தில் ஒரு பல்லி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்கவ், உடனே அதனை படம்பிடித்து, வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து, ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு ஆய்வு நடத்தி, கடைக்கு சீல் வைத்தனர். மேலும், குளிர்பானத்தின் மாதிரியை எடுத்து பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மெக்டொனால்ட்ஸ் கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுதவிர, அந்த உணவு விடுதிக்கு 3 மாதங்கள் வரை சோதனை செய்ய செல்வோம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அபராதம் செலுத்தப்பட்ட பின்னர், ஆமதாபாத்தின் சோலா பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகம், தூய்மை செய்யப்படுவதற்காக இரண்டு நாள் அவகாசம் அளிக்கப்படும்.

அதன்பின்னர், அதிகாரிகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதில், அனைத்தும் திருப்தியாக உள்ளது என எங்களது குழு அறிந்த பின்னரே கடை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Next Story
Share it