Theme Check

அங்கன்வாடியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அங்கன்வாடியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அங்கன்வாடியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
X

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும். அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it