Theme Check

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!
X

தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா.இங்கு 28 நாட்கள் திருவிழா நடைபெறும். அதிலும் கடைசி ஒருவாரம் நடக்கும் விழா மிகவும் சிறப்பு பெற்றது. இங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இந்த கோயிலின் வரலாறு சுவாரஸியமானது. அதாவது, சிவனை நோக்கி கௌமாரியம்மன் தவம் இருந்துள்ளார்.

அப்போது தீய நோக்கத்துடன் வந்த அரசன் ஒருவன், தவத்தில் இருந்த கௌமாரியம்மனை பார்த்து காம வயப்பட்டுள்ளார். உடனே கோபமடைந்த அம்மன், தர்ப்பை புல்லை எடுத்து வீசிய போது திரிசூலமாக மாறி அரசனின் இரு கண்களையும் பறித்தது. பின்னர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட அரசனுக்கு கௌமாரியம்மன் மீண்டும் ஒரு கண் பார்வை வழங்கியுள்ளார்.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால், திருவிழாவுக்கு ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வருவதுண்டு.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக 13.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது

இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் 28.05.2022 சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும், உள்ளுர் விடுமுறை தினத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு ( +2) பொதுத்தேர்வு வழக்கம் போல் நடைபெறும் எனவும், அவசர அலுவல்களை கவனிக்கும் கருவூலம் சார்நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு , செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it