இன்று மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா நாளை மார்ச் 3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்....

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஏப்ரல் 25 வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

