நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நாளை (11ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நாளை (11ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 28ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த திருவிழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.விழாவையொட்டி தினமும் இரவில் பட்டிமன்றம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், இசைகச்சேரி ஆகியவை நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.
newstm.in