Theme Check

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
X

கரூர் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கோலாகலமாக திருவிழா நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கியது.

இத்திருவிழா கடந்த 8ம் தேதி அன்று கம்பம் நடுதலுடன் தொடங்கப்பட்டது. அதன்படி நேற்று முக்கிய நாள் என்பதால் பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு, அக்னி சட்டி, பால் குடம் எடுத்துக் கொண்டு ஜவஹர் பஜார் வழியாக சுமார் 1 கி.மீ தூரம் நடந்து அதன் பின் கோவிலுக்கு வந்து தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். இந்த திருவிழாவின் மிகவும் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்வு இன்று நடைபெற உள்ளது.

இதை காண திருச்சி, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக இந்த மாவட்டத்தில் இன்று (மே 25) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படாது. இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக மாற்று வேலை நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it