நாளை உள்ளூர் விடுமுறை.. அரசு அறிவிப்பு..!
நாளை உள்ளூர் விடுமுறை.. அரசு அறிவிப்பு..!

திருபட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (ஜூன் 8-ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருபட்டினத்தில் ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஆயிரங்காளியம்மன் பூஜை விழா’ வெகு சிறப்பாக நடைபெறும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆயிரங்காளியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திரு பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (8-ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Next Story

