லோகேஷ் கனகராஜ் மருத்துவமனையில் அனுமதி !! ரசிகர்கள் அதிர்ச்சி
லோகேஷ் கனகராஜ் மருத்துவமனையில் அனுமதி !! ரசிகர்கள் அதிர்ச்சி

மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக இயக்குநராக அறிமுகமானது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம்தான். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்ததால் தான், கைதி,மாஸ்டர் தற்போது விக்ரம் என அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் பிஸியாக இயக்கி வருகிறார். 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன் என்பதை எனது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் மீண்டு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 29, 2021

