Theme Check

இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !! ஒரு சவரன் ரூ. 35,000ஐ தாண்டியது !!

இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !! ஒரு சவரன் ரூ. 35,000ஐ தாண்டியது !!

இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல !! ஒரு சவரன் ரூ. 35,000ஐ தாண்டியது !!
X

கொரோனா முடக்க காலத்தில் தங்கத்தின் விலை உச்சிக்கு சென்றது அதாவது ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரை சென்றது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. இனி நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது ஒரு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த வேலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தயே ஏற தொடங்கிய தங்கத்தின் விலை இன்றும் விலை உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.35,000க்கு மேல் சென்றது மற்றும் தொடர்ந்து 3வது நாளாகத் தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று காலையில் சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,096க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.72.10 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 01 ஆம் தேதி ரூ.33,904க்கு விற்ற ஒரு சவரன் தங்கம் இன்று ஏப்ரல் 09 ஆம் தேதி ரூ.35,096க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it