Theme Check

இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30% உயர்வு ?

இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30% உயர்வு ?

இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30% உயர்வு ?
X

இந்தியா முழுவதும் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு இவற்றின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படலாம் என லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் விடுத்த அறிக்கையில் டீசல் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததாலும், அரசின் பழைய வாகன அழிப்பு கொள்கையாலும் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் வாகனங்களும், இதனை சார்ந்த 20 லட்சம் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.இதனையடுத்து எங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 3 ல் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் லாரி உரிமையாளர்களின் நிலைப்பாடு குறித்தும், இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்திற்கும் 30 சதவீதம் வாடகையை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இவை நிறைவேறாத நிலையில் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்த தயார் நிலையில் இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it