Theme Check

ஏல சீட்டால் ஏற்பட்ட நஷ்டம்: சுடுகாட்டில் முதியவர் எடுத்த விபரீத காரியம்..!!

ஏல சீட்டால் ஏற்பட்ட நஷ்டம்: சுடுகாட்டில் முதியவர் எடுத்த விபரீத காரியம்..!!

ஏல சீட்டால் ஏற்பட்ட நஷ்டம்: சுடுகாட்டில் முதியவர் எடுத்த விபரீத காரியம்..!!
X

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தை சேர்ந்தவர் கிருபானந்தன் (வயது 74). இவர் அதே கிராமத்தில் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஏலச் சீட்டில் பணம் எடுத்தவர்கள் யாரும் திருப்பி பணம் தராததால் கிருபானந்தனுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த கிருபானந்தன் வந்தவாசி அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கிருபானந்தன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, வந்தவாசி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருபானந்தன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story
Share it