Theme Check

நிறைய காதல் கடிதம் வரணும்.. ராகு - கேது கோவிலில் சர்ச்சை நடிகை பிரார்த்தனை..!

நிறைய காதல் கடிதம் வரணும்.. ராகு - கேது கோவிலில் சர்ச்சை நடிகை பிரார்த்தனை..!

நிறைய காதல் கடிதம் வரணும்.. ராகு - கேது கோவிலில் சர்ச்சை நடிகை பிரார்த்தனை..!
X

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத் தனது புத்தாண்டை திருப்பதி ராகு - கேது கோவிலுக்கு சென்று தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு கங்கனாவுக்கு சிறந்த ஆண்டு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கங்கனா பல சர்ச்சைகளுக்கு ஆளானார். அத்துடன், அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தற்போது, அவருக்கு ஏற்பட்ட தீங்குகள் மற்றும் தோஷங்களைப் போக்க ராகு - கேது கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை அவருடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
Kangana Ranaut visits Tirupati on New Year; says 'This year I want less  FIR's & more love letters' | Celebrities News – India TV
கங்கனா, கடவுளிடம் செய்த பிரார்த்தனையை தனது ரசிகர்களிடமும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்ட கங்கனா, தனது பதிவில் 'உலகில் ஒரே ஒரு ராகு - கேது கோவில் மட்டுமே உள்ளது. இது திருப்பதி கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. அங்கு நான் வழிபட்டேன். ஐந்து லிங்கங்களில் வாயு லிங்கமும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. மிகவும் அழகான இடம் இது.

எனது அன்பான எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பிற்காக நான் இங்கு சென்றுள்ளேன். இந்த ஆண்டு எனக்கு குறைவான போலீஸ் புகார்கள், குறைவான எப்ஐஆர்கள் மற்றும் அதிக காதல் கடிதங்கள் வர வேண்டும். ஜெய் ராகு கேது ஜி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
Share it