Theme Check

பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் ! ஆசிரியருக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற கிராமத்தினர்!

பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் ! ஆசிரியருக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற கிராமத்தினர்!

பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் ! ஆசிரியருக்கு மொட்டை அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற கிராமத்தினர்!
X

பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து, கரி பூசி கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்று தண்டனை அளித்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் மண்பூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்து உள்ளார். அவரை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரைவும் அளித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலை ஏற்க மறுத்து விட்டால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சம் காரணமாக மாணவி பெற்றோரிடம் இதனை கூறவில்லை. எனினும் இதனை கிராம மக்கள் அறிந்துக்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அந்த ஆசிரியரை பிடித்து கிராமத்திற்கு இழுத்துவந்தனர். மேலும் அவருக்கு மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசியுள்ளனர். இதன்பின்னர் அவரை தெரு வழியே ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் உடனடியாக கிராமத்திற்கு சென்று அவரை மீட்டனர். மேலும் இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஆசிரியரை கைது செய்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it