'காதல்’ பட நடிகர் மரணம்! ஆட்டோவில் சடலமாக மீட்பு!

'காதல்’ பட நடிகர் மரணம்! ஆட்டோவில் சடலமாக மீட்பு!

காதல்’ பட நடிகர் மரணம்! ஆட்டோவில் சடலமாக மீட்பு!
X

திரையுலகில் ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு சென்றவர்கல் பலர் உண்டு. நிறைய பேரும் புகழும், பணமும் சம்பாதித்து இறுதியில் யாரும் கவனிப்பாரற்று மரணமடைந்தவர்களும் உண்டு. கடந்த 2004ல் வெளியான ‘காதல்’ திரைப்படம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் எனலாம். படத்தில் சிறு வேடங்களில் நடித்தவர்கள் உட்பட நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்த படம் ‘காதல்’.

இந்தப் படத்தில், விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் அந்த ஒரேயொரு காட்சியின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றவர். இன்று வரையிலும் அவருடைய புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே அந்த காட்சி ரசிகர்களின் மனக்கண் முன்னால் விரியும். அதன் பின்னர், விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்தார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது, கொரோனாவால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடைப்பெறாதது என அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டு வந்துள்ளார் நடிகர் பாபு. சமீபத்தில் தான் அவரது தாய் தந்தை மரணமடைந்தனர். அதன் பின்னர், மன அழுத்தத்துக்கு ஆளான நடிகர் பாபு, சாலைகளில் மன நோயாளியைப் போன்று சுற்றித் திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திரைத்துறையில், நடிகர் அபி சரவணன் போன்ற சிலர் அவருக்கு அப்போது உதவினார்கள். இந்நிலையில், ஆட்டோவில் படுத்து உறங்கிய நடிகர் பாபு, அடுத்த நாள் காலையில் ஆட்டோவில் இருந்து சடலமாக தான் மீட்கப்பட்டார். ஒரு வளரும் நடிகரின் முடிவு இத்தனை மோசமாக அமைந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:
Next Story
Share it