Theme Check

'பேஸ்புக்கில் காதல்'... பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. காதல் அழகானது என நிரூபித்த பெண்!

'பேஸ்புக்கில் காதல்'... பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. காதல் அழகானது என நிரூபித்த பெண்!

பேஸ்புக்கில் காதல்... பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. காதல் அழகானது என நிரூபித்த பெண்!
X

திரைப்படங்களில் எத்தனையோ காதல் கதைகளை பார்த்திருந்தாலும் அதனை உணரும்போது தான் காதல் எவ்வளவு அழகானது என்பது தெரியும். அப்படி ஒரு காதலை நிஜத்தில் நிகழ்த்தியிருக்கிறார் இந்த பெண். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் பவித்ரா. 23 வயதான இவர் டி.பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது, பேஸ்புக்கில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாகியுள்ளார். இவர் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழிலை விரிவுபடுத்த பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியபோது தான் பவித்ராவுடன் நட்பு கிடைத்துள்ளது.

'பேஸ்புக்கில் காதல்'... பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. காதல் அழகானது என நிரூபித்த பெண்!

இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில் விக்னேஷ்வரன் சுமார் 4 அடி மட்டுமே உயரம் கொண்டவர் என்பது பவித்ராவுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அது குறித்து சிறிதும் தயக்கம் கொள்ளாமல், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் இதற்கு மேல் என்ன இருக்கிறது, நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கைத் துணை எனக் கூறி பவித்ரா தனது உன்னதமான காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது தான் பிரச்சனை தலை தூக்கியது. பவித்ரா தனது காதலைப் பெற்றோரிடம் கூறிய போது, மகள் காதலிக்கும் காதலனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் நீ பொருத்தம் இல்லை.

'பேஸ்புக்கில் காதல்'... பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. காதல் அழகானது என நிரூபித்த பெண்!

எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு என பவித்ராவை வற்புறுத்தியுள்ளார்கள். ஆனால் மனதால் இணைந்த நம்மை யாரும் பிரிக்கக் கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்துப் பெற்றோர், உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

'பேஸ்புக்கில் காதல்'... பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்.. காதல் அழகானது என நிரூபித்த பெண்!

இதனைத்தொடர்ந்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டுச் சென்றனர். ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர். காதலுக்கு மனம் தான் முக்கியம் என்பதைப் பேச்சில் அல்ல, செயலில் நிரூபித்த பவித்ராவுக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it