அடுத்த மாதம் திரைக்கு வருகிறது "அன்பிற்கினியாள்"

அடுத்த மாதம் திரைக்கு வருகிறது "அன்பிற்கினியாள்"

அடுத்த மாதம் திரைக்கு வருகிறது அன்பிற்கினியாள்
X

இயக்குனர் கோகுல் ஜுங்கா படத்தை அடுத்து அருண் பாண்டியன் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்தப் படத்துக்கு அன்பிற்கினியாள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவாளராகவும், ஜாவித் ரியாஸ் இசையமைப்பாளராகவும், எடிட்ட்ராக பிரதீப் ஈ.ராகவ்வும், கலை இயக்குநராக ஜெய்சங்கரும் பணிபுரிந்து வருகின்றனர்.அன்பிற்கினியாள் படத்தின் டீஸர் கடந்த 22ஆம் தேதி படக்குழு வெளியிட்டது

இந்த டீசரில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் தந்தை ,மகளாக நடித்துள்ளனர்.இந்தப் படத்தின் தொடக்கத்தில் நெகிழ்ச்சி கலந்த அன்பு ததும்பும் காட்சிகளும்,பின்னர் வரும் த்ரில் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில், அன்பிற்கினியாள் படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 5 எனவும் இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it