Theme Check

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு.. கவலை தரும் உயிரிழப்பு விகிதம் !!

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு.. கவலை தரும் உயிரிழப்பு விகிதம் !!

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு.. கவலை தரும் உயிரிழப்பு விகிதம் !!
X

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. தினசரி பாதிப்பு பத்தாயிரம் என குறைந்துவந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி கடந்த 21ஆம் தேதி ஒரு நாள் தொற்று பாதிப்பு 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 அளவுக்கு அதிகரித்தது. அதன்பின்னர் இது தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, ஒடிசா, அரியானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் உள்ளது.

corona

அந்த வகையில் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 ஆக குறைந்தது. அதுவே நேற்று மேலும் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 ஆக பதிவானது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 893 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 784 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மொத்தம் 1,65,70,60,692 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it