Theme Check

குறைந்த கொரோனா.. திரையரங்குகளை மீண்டும் திறப்பதாக அறிவித்த அரசு !!

குறைந்த கொரோனா.. திரையரங்குகளை மீண்டும் திறப்பதாக அறிவித்த அரசு !!

குறைந்த கொரோனா.. திரையரங்குகளை மீண்டும் திறப்பதாக அறிவித்த அரசு !!
X

இந்தியாவில் கொரோனாவானது அனைத்து துறைகளையும் முடக்கிப்போட்டது. முதல் அலையைவிட இரண்டாம் அலை தான் நாட்டின் மருத்துவ கட்டமைப்பையும் கேள்விக்குறியாக்கியது. நிலையில் சினிமா மற்றும் திரையரங்குகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது.

theatre

இந்த நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள், அண்மையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொற்று குறைந்து வருவதால் தியேட்டர்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி முதல் சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா மாநில முடிவு செய்து, இன்று அறிவிப்பு வெளியிட்டது. திரையரங்குகள் திறப்பதற்கான நடைமுறைகளை வெளியிட்டது.

theatre

அதன்படி திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். மேலும் பார்வையாளர்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it