முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம்! மும்பையில் பரபரப்பு!
முகேஷ் அம்பானி வீட்டின் முன் வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம்! மும்பையில் பரபரப்பு!

மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் வீட்டின் முன்பாக வெடி பொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான இடத்தில் நின்றுக் கொண்டிருந்தது.
உலகின் டாப் 50 பணக்காரர்களில் ஒருவரான அம்பானிக்கு மும்பையில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவின் முன்பாக, வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வாகனத்தில் வெடிபொருட்கள் இருந்ததையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:
Next Story

