Theme Check

தொடங்கியது மாதவனின் அடுத்தப் படம்..!

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றப் படம் 'சார்லி'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கிறார். 'மாறா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, 'கல்கி' குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

தொடங்கியது மாதவனின் அடுத்தப் படம்..!
X

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றப் படம் 'சார்லி'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்கிறார். 'மாறா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, 'கல்கி' குறும்படத்தை இயக்கிய திலீப் குமார் இயக்குகிறார்.

இதில், மாதவனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறார். இவர்கள் இருவரும் 'விக்ரம் வேதா' படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதலை மையமாக கொண்டு உருவாக்கப்படும் 'மாறா' படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், மௌலி மற்றும் அலெக்ஸ்சாண்டர் பாபு ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it