Theme Check

அரசியல்வாதிகளுக்கு சாபம் கொடுத்துள்ள மதுரை ஆதீனம்!!

அரசியல்வாதிகளுக்கு சாபம் கொடுத்துள்ள மதுரை ஆதீனம்!!

அரசியல்வாதிகளுக்கு சாபம் கொடுத்துள்ள மதுரை ஆதீனம்!!
X

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை சமேத சாட்சிநாதசுவாமி திருக்கோயில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது. கோவிலுக்கு மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீ ஹரிஹர ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வருகை தந்தார்.

அவர், பிரளயம் காத்த விநாயகர், சாட்சிநாதசுவாமி மற்றும் கரும்படு சொல்லியம்மை ஆகிய சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்கோயில்களின் கும்பாபிஷேகங்கள் தாமதமாவதற்கு காரணம், அரசியல்வாதிகள் தான் என்றார்.

tnj

ஆதீன நிலங்கள் பல ஆளுங்கட்சி, எதிர்கட்சிக்காரர்களிடம் உள்ளது, அதற்காண குத்தகை முறையாக அவர்கள் செலுத்தாததுடன், பல இடங்களில், ஆதீன நிலங்களை விற்பனையும் செய்து மோசடி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார். குத்தகை தொகையை கட்டாதவர்கள் அடுத்த பிறவியில் வௌவாலாப் பிறப்பார்கள், இதற்கு சரியான சட்டத்திட்டங்கள் இல்லாததே காரணம் என்றும் கூறினார்.

இன்றைய இளைய சமுதாயம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற ரீதியில் செயல்படுகிறார்கள், அரசியலும், சினிமாவும் அவர்களை பெரிய அளவில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மாக் செல்கிறார்கள் என்று விமர்சித்தார்.

tasmac 1

அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வரவேற்புக்குரியதே என்று கூறிய அவர், ஓதுவார்கள் இல்லாத கோயிலில்களில் ஓதுவார்களை நியமிக்கும் பணியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it