டியூஷன் சென்ற 17 வயது மாணவருடன் ஆசிரியை மாயம்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்
டியூஷன் சென்ற 17 வயது மாணவருடன் ஆசிரியை மாயம்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சமீப நாட்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் குறித்தும், பயிற்சிக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் குறித்தும் செய்திகள் வெளியாகி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் வகுப்பாசிரியர் ஒருவர் தன்னிடம் படித்த மைனர் மாணவர் ஒருவருடன் மாயமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டி தனியார் பள்ளியில் பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தற்போது பள்ளி மாணவர்களுக்கு தன்னுடைய வீட்டில் டியூஷனும் எடுத்து வந்துள்ளார். அவர் பணியாற்றி வந்த பள்ளியில் வகுப்பாசிரியாக இருக்கும் அவரிடம், பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படிப்பதற்காக ஆசிரியையின் வீட்டிற்கு தினமும் சென்று வந்துள்ளார்.

ஆனால் கடந்த 27ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வழக்கம்போல் டியூஷனுக்கு சென்ற மாணவர் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்த மாணவரின் பெற்றோர் டியூஷன் ஆசிரியை வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அங்கு ஆசிரியையும் இல்லை. தொடர்ந்து மாணவரின் பெற்றோர் கேட்டப்போது ஆரம்பத்தில் எதையும் கூறாத ஆசிரியையின் பெற்றோர் சிறிது நேரம் கழித்து ஆசிரியை, மாணவர் இருவரும் மாயமானது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை- மாணவர் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை என்பதால் இருவரின் மொபைல் போன் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி மேற்கொளள்ப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாயமான இருவரும் தங்கள் வீட்டில் இருந்து பணம், நகை போன்ற எதையும் எடுத்துச் செல்லவில்லை.

இது குறித்து மாணவரின் பெற்றோர் கூறுகையில், 17 வயதாகும் தங்கள் மகன் வகுப்பாசிரியையான அவரின் டியூஷனுக்கு கடந்த 2 - 3 மாதங்களாக சென்று வந்தார். லாக் டவுன் காலத்தில் தினமும் 4 மணி நேரம் அவனுக்கு ஆசிரியை டியூஷன் எடுத்து வந்தார். இந்த நிலையில் தனது மகனுடன் ஆசிரியர் சென்றது ஏற்கமுடியாது தங்கள் மகனை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
27 வயதுடைய அந்த ஆசிரியை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டு தற்போது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

