மாயமான பெண் கற்பழித்து கொலையா..?: நிர்வாண நிலையில் உடல் மீட்பு.. போலீசார் விசாரணை..!
மாயமான பெண் கற்பழித்து கொலையா..?: நிர்வாண நிலையில் உடல் மீட்பு.. போலீசார் விசாரணை..!

நெல்லை, பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 வயது பெண் 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து அவருடைய கணவர் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அந்தப் பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், 100 நாள் வேலை முடிந்ததும் அந்தப் பெண் அங்குள்ள ஆற்றில் குளித்துவிட்டு தனியாக ஊருக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பெண்ணிடம், ‘100 நாள் வேலை தொடர்பாக அதிகாரிகள் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறினர்.
எனவே, எங்களுடன் வாருங்கள்’ என்று கூறியுள்ளனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால், அந்த கும்பல் அவரை காட்டுப்பகுதி வழியாக இழுத்து சென்றுள்ளது.
அதன்பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி, அதே ஆடையை கிழித்து கை, கால் மற்றும் வாய் பகுதிகளில் இறுக்கமாக கட்டியுள்ளனர். பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே வீசிச் சென்றுள்ளனர்.
மேலும், அந்தப் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

