Theme Check

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு !!

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு !!

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்துக்கு பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு !!
X

கொளுத்தும் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் வாழ்வதாரம் இழந்ததால் இது தொடர்பான சம்பங்களில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவில் கனமழை கொட்டுகிறது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகள் துண்டிக்கப்பட்ட தண்டவாளங்கள் மூழ்கின. மகாராஷ்டிராவில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

rain

குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல நகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர்.

rain

தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 13 மாவட்டங்களில் 1,043 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 25,581 விலங்குகளும் உயிரிழந்துள்ளன. மேலும் 100 பேரைக் காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it