Theme Check

கொழுந்தனை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்த திவ்யா!! புருஷன் வேண்ட

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை சேர்ந்த தயாளன் என்பவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். தயாளனின் அண்ணன் சந்துரு எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக சந்துருவும், அவரது மனைவி தாரணியும் பிரிந்துவிட்டனர். தாரணி தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கொங்கையூரில் வசித்து வருகிறார்.

கொழுந்தனை குடும்பத்தோடு சேர்ந்து கொலை செய்த திவ்யா!!  புருஷன் வேண்ட
X

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை சேர்ந்த தயாளன் என்பவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். தயாளனின் அண்ணன் சந்துரு எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக சந்துருவும், அவரது மனைவி தாரணியும் பிரிந்து விட்டனர். தாரணி தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கொங்கையூரில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் சந்துரு, தான் வாங்கிக் கொடுத்த நகைகளை திருப்பித் தருமாறு கேட்டு அடிக்கடி தாரணி வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். ஆனால் தாரணி நகைகளை கொடுக்க முடியாத என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சந்துரு, தனது தம்பி தயாளனிடம் கூறி அழுதுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தயாளன், கொடுங்கையூர் சென்று தாரணி வீட்டின் முன்னால் சத்தம் போட்டுள்ளார். அப்போது தாரணமி, அவரது கணவர் தனுஷ், தந்தை சுகுமாரன் வீட்டில் இருந்துள்ளனர். தயாளன் தொடர்ந்து தகராறு செய்யவே ஆத்திரம் அடைந்த தாரணியின் உறவினர்கள் தயாளனை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் தாரணியின் தந்தை சுகுமாரன் தயாளனை கத்தியால் சரமாரியாக குத்தினார்.


இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தயாளன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொடுங்கையூர் காவல்துறையினர், தயாளன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுகுமாரன், தாரணி, தனுஷ் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it