Theme Check

கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்கள் திறப்பு ..!!

கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்கள் திறப்பு ..!!

கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்கள் திறப்பு ..!!
X

கொரோனா 3ஆவது அலையை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கேரளா பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக மாறியுள்ளது.
கேரளாவில் மே 8-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கில் புதிய தளர்வுகளை கேரள அரசு நேற்று அறிவித்தது. அதன்படி,

  • கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை வரும் 11-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
  • ஏசி இல்லாத ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
  • மாநிலத்தில் தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை.
  • பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று முதல் அனுமதி.
  • சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை.
  • நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை. அருவிகளை கண்டு ரசிக்க மட்டும் அனுமதி.
  • சுற்றுலா வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Next Story
Share it