Theme Check

ஆணின் கைகள் உடைக்கப்படும்.. பெண் எம்.பி. அதிரடி பேச்சு

ஆணின் கைகள் உடைக்கப்படும்.. பெண் எம்.பி. அதிரடி பேச்சு

ஆணின் கைகள் உடைக்கப்படும்.. பெண் எம்.பி. அதிரடி பேச்சு
X

மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே உள்ளார். இவர் அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசும் தன்மையும், மத்திய அரசை கடுமையாக கேள்விக்கும் பழக்கமும் உடையவர். இதனால் இவரது பேச்சு மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

இந்த நிலையில், நேற்று புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுப்ரியா சுலே, ஷாகு மகாராஜ், மகாத்மா ஹுலே, பாபாசாப் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மராட்டியம் இது என்று கூறினார். மகாராஷ்டிராவில் பெண் மீது தாக்குதல் நடத்த எந்த ஆணாவது தன் கைகளை ஓங்கினால் நானே அங்கு சென்று அந்த ஆண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். மேலும், தாக்குதல் நடத்த ஓங்கிய அந்த ஆணின் கைகளை உடைத்து அந்த ஆணிடமே கொடுத்துவிடுவேன், என்றார்.

d

முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பங்கேற்ற நிகழ்ச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்ப தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தனர். அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், பெண்களை தாக்கியதாக பாஜக உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சுப்ரியா சுலே இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it