மம்தாவுக்கு 24 மணி நேரம் தடை! பரபரக்கும் மேற்கு வங்கம்!
மம்தாவுக்கு 24 மணி நேரம் தடை! பரபரக்கும் மேற்கு வங்கம்!

தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மமதா பானர்ஜி, மத, இன ரீதியாக பேசி வாக்குகளை ஈர்க்க முயற்சி செய்ததாகவும், மத்திய ஆயுதப்படையினரின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையிலும் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதில் அளித்த மம்தா, தாம் எவரையும் குறிப்பாக மத்திய ஆயுத படையினரை மிரட்டும் வகையிலோ அச்சுறுத்தும் வகையிலோ பேசவில்லை என்று விளக்கம் அளித்தார்.

அவரது பதிலை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பரப்புரையில் மமதா பானர்ஜி பேசிய பல்வேறு வரிகளை தமது பதிலில் தெரிவிக்காமல் தவிர்த்து விட்டதாக தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை மம்தா பானர்ஜி மீறிய செயலை கண்டிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் 13ம் தேதி இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிப்பதாக உத்தரவில் தெரிவித்துள்ளது.
newstm.in

