மம்தாவுக்கு கார் கதவினால் காயம் ஏற்பட்டது.. மேற்கு வங்க தலைமை செயலாளர் அறிக்கை !!
மம்தாவுக்கு கார் கதவினால் காயம் ஏற்பட்டது.. மேற்கு வங்க தலைமை செயலாளர் அறிக்கை !!

மேற்கு வங்கத்தில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக உள்ளது. அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த மார்ச் 10 ஆம் தேதி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் அங்கிருந்து கொல்கத்தா திரும்ப தனது காருக்கு சென்றார்.

அவர் காரில் ஏறியப்போது பின்தொடர்ந்து சென்ற 5 பேர் மம்தா பானர்ஜியை கிழே தள்ளி காரின் கதவை அடைத்து அடித்ததாக தெரிகிறது. இதனால் மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்.கே.கே.எம் மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் நேற்று மாலை சமர்ப்பித்தார். அதில், கார் கதவால் தான் காயம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனினும், மம்தா பானர்ஜியின் காலில் கதவு அறைந்ததற்கு என்ன காரணம் என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதற்கு பதிலளித்த திரினாமூல் காங்கிரஸ் கட்சி, சில நபர்கள் வேண்டுமென்றே கார் கதவை மூடிவிட்டார்களா இல்லையா என்பதையும் தேர்தல் ஆணையம் அறிக்கையில் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளது.
newstm.in

